சட்ட விரோத பொலிதீன் உற்பத்தியாளர்கள் 300 பேருக்கு எதிராக வழக்கு-உபாலி இந்திரத்ன

199 0

தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்தி செய்யப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்கு பொலிஸாரின் நேரடி உதவியைப் பெற்றுக் கொள்ள மத்திய சூழல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகளை தயார் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கழிவுப் பொருட்கள் முகாமைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் உபாலி இந்திரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொலிஸார் சாதாரணமாக போக்குவரத்து ஒழுங்குகளை பேணுவதைப் போன்று, சூழல் சட்ட திட்டங்களையும் செயற்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் சட்ட விரோத பொலிதீன் உற்பத்தியாளர்கள் 300 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment