மீண்டும் போராட்டத்தில் முல்லைத்தீவு வேலையற்ற பட்டதாரிகள்!

190 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வேயைற்ற பட்டதாரிகளின் நேர்முக தேர்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பாராபட்சம் காட்டியுள்ளதால் அதிகளவான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வு மாவட்ட செயலகத்தில் அராசங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.

அவர்கள் நேர்முக தேர்வு செய்யும் போது புள்ளி அடிப்படையில் நேர்முகதேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்கள் அதன் அடிப்படையில் 319 வேலையற்ற பட்டதாரிகள் நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளார்கள் என்றும் இதில் 72 பட்டதாரிகளுக்கே நியமன அனுமதி கிடைத்துள்ளது.

என தெரிவித்த அவர்கள் அதிககூடிய புள்ளியினை கொண்டவார்கள் தெரிவுசெய்யப்படாமலும் குறைந்த புள்ளிகளை கொண்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் புலப்பட்டுள்ளது.இதில் மாவட்ட செயலகத்தில் உள்ள அதிகாரிகள் தாங்கள் விரும்பியவர்களையே தெரிவு செய்துள்ளமை வெளிப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வெளிப்படை தன்மை இல்லாமல் மாவட்ட செயலகம் ஈடுபட்டுள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது நேர்முக தேர்வுக்கு சென்ற அனைத்து பட்டதாரிகளின் புள்ளிவிபரத்தினை காட்டுமாறு அரசாங்க அதிபரிடம் கேரியிருந்தும் பல இழுத்தடிப்புக்களின் பின்னர் அவர்கள் புள்ளிவிபரத்தினை காட்டியுள்ளார்கள்.

அதில் அதிகளவான புள்ளிகளை பெற்றவர்களின் பெயர்விபரங்களை தெரிவு செய்யவில்லை இந்த நிலையினை கருத்தில் கொண்டு இதில் தெரிவாகாத பட்டதாரிகள் சிலர் நேற்று முந்தினம் கொழும்பு சென்று அங்குள்ள தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் முறையிட்டுள்ளோம்.

அதில் அவர்கள் எங்கள் தகமைகளை பார்வையிட்டு உங்கள் விபரங்கள் எங்களுக்கு மாவட்ட செயலகத்தால் அனுப்பிவைக்கப்படவில்லை அவர்கள் அனுப்பிய விபரத்திற்கே நாங்கள் அனுமதி கடிதங்கள் கொடுத்துள்ளோம் என்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை சாடியுள்ளதுடன் மாவட்ட செயலகத்தில் இதுதொடர்பில் கேட்டபோது அவர்கள் அதிக வயது என்று காரணம் சொல்லியுள்ளார்கள் .

தற்போது அரச உத்தியோகத்திற்கு 45 வயது எல்லை நிர்ணயிக்கப்பட்டு தமிழ் மக்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசியல் அதிகாரிகளாலேயே பாரபட்சம் கட்டப்படும் நிலை காணப்படுகின்றது என்றும் இந்த அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment