ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலையில் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் அமைந்துள்ள ஜோன் கெனடி வானுர்தி நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதி நாளைய தினம் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையிலும் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கலம் டர்ன்புல் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம் ஜே அக்பர் நேபாள பிரதமர் புஷ்பா கமல் டஹால், உலக பொருளாதார அமையத்தின் தலைவர் பேராசிரியர் Klaus Schwab உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

