கிளிநொச்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட பொதுச்சந்தையை அவர் நேற்று பார்வையிட்டார்.
இதன்போது பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடிய அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
அதிகாரிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

