வடக்கில் இரு வருடங்களில் 7000 அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்!

403 0

கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஆகஸ்ட் மாதம்; 15ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் 7147 அபாயகரமான வெடிப்பொருட்களை அகற்றியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஜந்து இலட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து நூற்றியேழு சதுரமீற்றர் பரப்பளவில் (597,107) இருந்து ஏழாயிரத்து நூற்று நாற்பத்து ஏழு (7147) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

மேலும் இந்நிறுவனம் இரண்டு இலட்சத்து இருபத்தாறாயிரத்து எழுநூற்று அறுபத்து நான்கு (226,764 Sqm) நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

கண்ணிவெடியகற்றுதல் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர் றொலி இவன்ஸ,மற்றும் தேசிய கண்ணிவெடி அகற்றுதலுக்கான பொறுப்பதிகாரி மகிந்த விக்ரமசிங்க அடங்கிய குழுவினர் இம்மாதம் 04 ஆம் திகதி இந்நிறுவனத்திற்கு வருகை தந்ததுடன் நிறுவன அலுவலகம் மற்றும் கண்ணிவெடியகற்றும் தளம் என்பவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment