இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் அனந்தி!

1 0

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் இனறு வடமாகாண மகளீர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த 15.ஆம் திகதியன்று கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற அனந்தி சசிதரன், குடும்பத்தினருடன் கலந்துரையாடி குடும்ப நிலைமைகளை கேட்டறிந்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,

பயன்படுத்த முடியாத பொருத்தமற்ற வாகனங்களை படையினர் பயன்படுத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் விபத்தாக இருந்தாலும், பாவணைக்கு உதவாத வாகனத்தை செலுத்தியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது,

குறித்த வாகனம் பிறேக் போதுமானதாக இல்லாமையினாலேயே விபத்த இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு படையினர் பாவணைக்கு உதவாத வாகனங்களை செலுத்துகின்றனர். இவ்வாறான வாகனங்களை கடற்படையினரும், இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர்.

இன்று குறித்த விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பத்தின் நிலை என்ன? 5 பிள்ளைகளை கொண்ட இந்த குடும்பத்தின் நிலை தொடர்பில் யார் பொறுப்பு கூறப்போகின்றார்கள். இதற்காகவே வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நாம் அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.

இந்த குடும்பம் மீள்குடியேறிய காலம் தொட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்கின்றது. தற்காலிக கொட்டகையில் வாழும் இவர்களுக்கு யார் பாதுகாப்பளிப்பது, இவ்வாறான தகர கொட்டகையில்தான் இவர்கள் வாழ்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

சொந்தமாக காணியோ, வீடோ அற்ற நிலையில் சகோதரி ஒருவரின் தற்காலிக கொட்டகையில் குறித்த குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடதக்கது,

Related Post

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

Posted by - December 2, 2018 0
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரொருவர்  நேற்று சனிக்கிழமை மாலை தாக்குதலுக்குள்ளான நிலையில் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர்ப்பற்று பிரதேச…

கிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

Posted by - February 10, 2018 0
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவு…

மஸ்தானுக்கு எதிராக போராட்டம்

Posted by - June 13, 2018 0
இந்து விவகார பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்  நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இந்து மக்கள் ஒற்றுமை அமைப்பினர்  போராட்டம்! இந்து விவகார பிரதி அமைச்சராக காதர்…

கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - April 3, 2017 0
கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று…

பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கிராம அலுவலர்கள் இன்று பணிபுறக்கணிப்பு!

Posted by - August 2, 2018 0
அண்மையில் கிராம அலுவலர் ஒருவரது அலுவலகம் வாள்வெட்டு குழுவினால் தாக்கப்பட்டமையினை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் சங்கம் இன்று தமது பணிகளை தங்களுக்கான அலுவலகங்களில் மேற்கொள்ளாது…

Leave a comment

Your email address will not be published.