மாகாண சபைத் தேர்தல் பழைய முறைப்படியே – கிரியெல்ல

209 0

நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய முறைமையின் கீழ் நடாத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகள் முழுமைப்படுத்தப்படாதுள்ளதாகவும் இதனால், புதிய முறைமையில் நடாத்துவது சாத்தியமில்லாத ஒன்று எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தற்பொழுதுள்ள சட்ட ஒழுங்குகளின் படி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என பிரதமர் கட்சித் தலைவர்கள் கூட்டங்களில் பல தடவைகள் கூறிவருவதாகவும் அமைச்சர் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவதற்குத் தேவையான போராட்டத்தை எதிரணியினருடன் இணைந்தாவது முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment