புதன்கிழமை வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு, இன்று ஜனாதிபதியுடன் பேச்சு

213 0

ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் பலவற்றின் பிரதிநிதிகள் இன்று (16) பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது சம்பள முரண்பாடு குறித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரயில்வே தொழிற்சங்கங்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (15) காலை நடைபெற்றுள்ளது. இதில், தமது பிரச்சினைக்கான தீர்வு குறித்து நீண்ட கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளனர்.

இதன்படி, தமது சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் காலக்கெடு வழங்குவதாகவும், இதற்குள் தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், எதிர்வரும் செவ்வாய் பின்னேரம் அல்லது புதன்கிழமை முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை, இன்னும் இரு மாதங்களின் பின்னரேயே ஆணைக்குழுவின் தீர்மானத்தின் படி ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment