தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2018” – சுவிஸ்

31 0

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா ஓகஸ்ட் மாதம் 11ம், 12ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள ளுpழசவயடெயபந னுநரவவறநப மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம் நோக்கிய தேடலை ஏற்படுத்தும் நோக்ககில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடாத்தி வருகின்றது. நடைபெற்று முடிந்த இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான அணிகள் வருகைதந்திருந்தன.

இருதினங்களும் காலை 8.45 மணியளவில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் விளையாட்டு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர்களுக்கான அகவணக்கத்தை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், வீரர்கள் உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றுடன் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்கள் பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, துடுப்பாட்டம், முதலான குழுவிளையாட்டுக்களில் இம்முறை அதிக எண்ணிக்கையிலான அணிகள் களமிறங்கின.

குறிப்பாக உதைபந்தாட்டப் போட்டியில் ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் பல அணிகள் மோதின. இம்முறை கனடா நாட்டில் இருந்து இளையோர் பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகள் கலந்து சிறப்பித்திருந்தன. வளர்ந்தோர்; உதைபந்தாட்ட இறுதியாட்டம் சனியன்று இரவு மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.இளையோருக்கான தடகளப் போட்டிகளிலும் இவ்வருடம் பல போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடம்பெற்ற சங்கீதக்கதிரை, கண்கட்டி முட்டி உடைத்தல்,குறிபார்த்து சுடுதல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முண்டியடித்தமையை காண முடிந்தது..

உதைபந்தாட்டம் முதலான குழுநிலைப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிகளிலும் அணிகள் மூர்க்கத்துடன் மோதிக் கொண்டாலும், போட்டிகள் முடிந்தவுடன் பகையுணர்வோ, பொறாமையோ இன்றி சக அணிகளின் வீரர்களை கட்டித்தழுவி நட்புணர்வை வெளிப்படுத்தியமை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இருதினங்களும் சிறுவர்கள், இளையோர்கள், வளர்ந்தோர்கள் என பல நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் குதூகலத்துடனும், போட்டிகளிலில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதிமிக்க வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையில் அனைத்துலக ரீதியில் சாதிக்க கூடிய திறமை மிக்க தமிழ் இளந்தலைமுறையினர் புலம்பெயர்ந்த நாடுகளில் வளர்ந்து வருகின்றமையை இம்முறை விளையாட்டு விழாவில் அவதானிக்க முடிந்தது. இது போன்ற விளையாட்டு நிகழ்வுகள் மூலம் புலத்திலுள்ள இளையோர் மத்தியில் தாயகம் குறித்த புரிதல் விரிவடைகின்றது.

இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏற்பாட்டுக்குழு
தமிழர் விளையாட்டு விழா 2018

Related Post

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் -திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - March 17, 2017 0
சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல், அங்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள்…

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்நினைவு வணக்கநிகழ்வு- யேர்மனி, ராட்டிங்கன்

Posted by - May 21, 2018 0
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்நினைவு வணக்கநிகழ்வு. யேர்மனி ராட்டிங்கன் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட ‘கறுப்பு ஜூலை’. 22.07.2017

Posted by - July 23, 2017 0
‘தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்’. என்பது யதார்த்த உண்மை. தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத…

இத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாளம், தற்போதைய நிலவரம் – தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி

Posted by - April 26, 2017 0
25 ஏப்ரல் 2017 அன்று இத்தாலி சுதந்திர நாளை முன்னிட்டு Reggio Emilia – Gattatico வில் இரண்டாம் உலகப்போரில் நாசிப்படைகளுக்கு எதிராகப் போராடிய 7 சகோதர…

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 24.11.2018

Posted by - November 26, 2018 0
    மாவீரர்கள் எமது மனங்களில் நீறாத நெருப்பாக பூத்துக்கிடப்பவர்கள். தன்னலமற்ற புனித இலட்சியம் ஒன்றிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் இந்த மாவீரர்கள். தமிழீழ தேசத்தின் சொல்ல முடியாத…

Leave a comment

Your email address will not be published.