ஈராக் நாட்டின் பைஜி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அவ்வப்போது மக்கள் கூடும் இடங்களிலும், தங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்துவதுமாய் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஆல்பு ஜுவாரி என்ற கிராமத்தில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அல் ஷாபி எனும் பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவரகள் என்பது குறிப்பிடத்தக்கது.

