பொல்லால் தாக்கி சகோதரரை கொலை செய்தவர் கைது

302 0

வரகாபொல, பதுவத்தை பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொல்லால் தலைக்கு தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயமடைந்த நபர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சகோதரரே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தோலங்கமுவ, புருன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment