பாதாள குழுவைச் சேர்ந்த மஞ்சு கைது

211 0

பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர் என கருதப்படும் மஞ்சுல சமந்த எல்வல எனப்படும் மல்வத்தகே மஞ்சு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க பேலியகொட பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து ஐந்து கிரேம் ஹெரோயின் போதைப் பொருள், 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவைகள், சட்டவிரோத கடவுச் சீட்டுக்கள், 37 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment