இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா?

8 0

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா? என்பது உறுதிப்படுத்தப்பட இயலாத நிலையில் அவர்கள் பேரவைக்கு பொறுப்புகூறும் உரிமை அற்றவர்கள். என வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடமாகாணசபையின் 129ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சுகாதார அமைச்சரிடம் வாய்மொழி மூல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதன் போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் சி.தவராசா, சபையில் தாம் ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்பவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கலாம். ஆனால் வேறு எவரும் பதிலளிக்க இயலாது. காரணம் சட்டரீதியாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்கள். இங்குள்ள மற்றய அமைச்சர்கள் யார்? என்பது உறுதிப்படாத நிலையில் ரவிகரனின் கேள்விக்கு முதலமைச்சர் தவிர்ந்த மற்றய யாரும் பதிலளிக்க இயலாது என தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த விடயத்தில் தலையிட்ட அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் வாய்மொழிமூல கேள்வியை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்ததுடன், எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சபைக்கு கொண்டுவரவுள்ள விசேட கருத்து ஒன்றுக்கு அனுமதி வழங்கினார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் தான் பதவிநீக்கப்பட்டது தொடர்பாக, டெனிஸ்வரனால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவு கடந்த யூன் மாதம் 29ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது.

குறித்த இடைக்காலத்தடை உத்தரவின் அடிப்படையில் டெனிஸ்வரன் தொடர்ந்து அமைச்சராக இருக்கின்றார் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.

அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபை ஒன்றிற்கு முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களிற்கு மேல் இருக்க முடியாது. ஆனால் இன்று வடக்கு மாகாண சபையில் ஆறு அமைச்சர்கள், செயற்படுகின்றார்கள்.

இவ்விடயம் சீர் செய்யப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் அமைச்சரவையைக் கூட்டவேண்டாமென்று பிரதம செயலாளரிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஆதலால் முதலில் இந்த மாகாண சபையில் யார் அமைச்சர்கள் என்று எமக்கு கௌரவ முதலமைச்சர் அவர்களால் ஒழுங்கு செய்யப்படும் வரை சபையில் அமைச்சர்களிற்குரிய ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்படக் கூடாதென அவைத் தலைவரை கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று அமைச்சர்களே யாரென்று தெரியாத சபையில் நாம் கூட்டுப் பொறுப்பினையும், கூட்டு வகை கூறலையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதற்கு நிரந்தரமான தீர்வொன்று உடனடியாகக் காணப்படல் வேண்டும். இன்றேல் இச்சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தல் அர்த்தமில்லாத ஓர் செயற்பாடு ஆகும் என்றார்.

 

Related Post

மன்னாரில் ஒருவரையொருவர் அனைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்பு

Posted by - July 18, 2018 0
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் ஒருவரையொருவர் அனைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்…

அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் – சந்திரகுமார்

Posted by - November 2, 2018 0
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ”நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை…

மீன்பிடி தொடர்பில் பாராளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தினால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்(காணொளி)

Posted by - July 15, 2017 0
பாராளுமன்றில் மீன்பிடி தொடர்பிலான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத்…

வவுனியா புளியங்குளத்தில் வீட்டிலிருந்து கணவன் , மனைவியின் சடலம் மீட்பு

Posted by - September 8, 2018 0
வவுனியா புளியங்குளம் – பரிசங்குளம் பகுதியில் வீட்டிலிருந்து கணவன் , மனைவி இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து…

மஹிந்த எவ்வாறு ஆட்சியை பிடிப்பார் – சம்பந்தன் கேள்வி

Posted by - July 27, 2017 0
மக்கள் நிராகரித்த ஒருவர் எவ்வாறு ஆட்சியை பிடிப்பார் என எதிர்கட்சி; தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். மஹிந்த ராஜபக்சவை மக்கள் ஜனநாயக…

Leave a comment

Your email address will not be published.