விரைவில் ஸ்ரீ.ல.சு.க.யின் தலைமை ஐ.தே.கட்சி எதிர்ப்புக் குழுவிடம் -டிலான்

488 0

nஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்டுள்ள கூட்டரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு உடன்பட்டாலேயே கட்சியின் அடுத்த வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்வோம் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

மிகவிரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ள உறவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முறித்துக் கொள்ளவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்புக் குழுவொன்று கட்சியின் தலைமைத்துவத்தை எடுக்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ ல.சு.க.யின் நடவடிக்கைகளில் நிபந்தனையுடனேயே கலந்துகொள்ளவுள்ளோம் எனவும் இன்று(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment