இரண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

349 0

பலாங்கொட, நகரில் தனியார் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் 16 வயது மாணவர்கள் இருவருக்கு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார்.

வேறொரு ஆசிரியரின் வகுப்பில் கலந்து கொண்டதற்காக குறித்த இரண்டு மாணவர்களுக்கும் இந்த ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் பலங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

குறித்த ஆசிரியர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment