ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தவும்- கல்வி அமைச்சு

231 0

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தி பரீட்சை நிலையங்களை வந்தடையுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில் பணியாளர்கள் நேற்று (08) பிற்பகல் ஆரம்பித்த வேலை நிறுத்தம் இன்றும் (09) தொடர்வதனால், மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சைக்கு சமூகம் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உயர் தர பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி இன்று (09) இராணுவத்தினரின் உதவியுடன் விசேட பஸ் சேவையை, அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

Leave a comment