90 வயதுவரை ஆரோக்கியமாக வாழ கருணாநிதி பின்பற்றியவை!

341 0

செந்தமிழ் தாயின் தமிழ் பிள்ளை. தமிழ் மக்களின் தமிழ் எழுத்துக்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் கருணாநிதி அவர்கள். அரசியலின் நுணுக்கங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப அரசியல் சதுரங்க வேட்டையில் அதன் காய்களை நகர்த்துவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க, எப்போதும் எல்லோருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இவரை போன்ற சொல்லாடலை வேறு எவராலும் கையாள முடியுமா..! என வியக்கும் அளவிற்கு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்து விடுவார். தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய பங்கு எண்ணற்றவை. அவரின் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் அவர் பார்த்த சவால்கள் பல. அவற்றையெல்லாம் சிதறடிக்க அவர் பயன்படுத்திய யுத்திகள் ஏராளம்.

Karunanidhis daily routine in tamil

மற்ற அனைவரை காட்டிலும் உடல் வலிமை, மன வலிமை ஆகிய இரண்டிலும் ஒரு படி முன்னோக்கியே இருந்தார் கலைஞர். இன்று இவர் நம்மை விட்டு பிரிந்தாலும், என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். கடைசி காலத்தை தவிர இதற்கு முன் அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். முதுமையின் காரணமாகவே இன்று அவர் உடல் நிலை சரி இல்லாமல் இறந்து விட்டார். எத்தகைய உணவு பழக்கம், உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்திருந்தால் இத்தனை வயது வரை அவர் ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்திருப்பார் என்பதை எண்ணி பாருங்கள். அவரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி இந்த பதிவில் மனமாற தெரிந்து கொள்வோம்.

போண்டா பிரியர்..!
முத்தமிழ் அறிஞர் அவர்கள் எப்போதும் அவருக்கு பிடித்தமான உணவுகளையே உண்பார். இருப்பினும் உணவு கட்டுப்பாட்டை எப்போதும் மறக்க மாட்டார். அண்ணா அறிவாலையத்துக்கு அருகில் இருக்கும் ஆனந்த பவன் ஓட்டல் போண்டா என்றால் கலைஞர் அவர்களுக்கு அதிக பிரியம். வேலை நேரத்திலும் போண்டாவை பிறரை வாங்கி வர சொல்லி சாப்பிட்டு மகிழ்வார். உடல் ஆரோக்கியம் :- கலைஞர் அவர்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றி 45 வயது வரை அதிகம் அக்கறை கொள்ள மாட்டார். இருந்தாலும் 45 வயது வரையிலும் சீரான உடல் ஆரோக்கியத்துடனேயே இவர் இருந்தார். கட்சி உடன்பிறப்புகள் கூட “எப்படி தலைவரே, இவ்வளவு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இந்த வயதிலும் இருக்கிறீர்கள்..?” என்றே கேட்பார்களாம். முதுமையின் காரணமாகவே 45 வயதுக்கு பிறகு உடற்பயிற்சி போன்றவற்றை முறையாக கற்று அதனை பின்பற்றினாராம். உடற்பயிற்சி :- உடலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனேயே அவருக்கு தெரிந்து விடுமாம். அந்த அளவுக்கு தனது உடலை பற்றி நன்கு படித்து வைத்திருந்தார். தினமும் அதிகாலையில் விரைவாக எழுந்து, உடற்பயிற்சி செய்வாராம். முன்பெல்லாம் அவரது நாய்குட்டியுடன் கடற்கரைக்கு வாக்கிங் செல்வார். அதன் பிறகு உடல் நிலை பாதிப்படையாத காலத்தில் 3 முறை அறிவாலயத்தை சுற்றி வருவார். தினமும் சுமார் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சியை செய்வாராம்.

தின உணவு முறை :-

தின உணவு முறை :-

எப்போதும் உணவு பழக்கத்தில் கவனத்துடன் செயல்படுவாராம். சரியான வேலைக்கு உணவுகளை எடுத்து கொள்வார். காலையில் இட்லி – சாம்பார் அல்லது ஏதாவது ஒரு வகை சட்னியுடன் சாப்பிடுவார். மதியம் வேக வைத்த காய்கறிகள், கீரைகள், சாம்பார் ஆகியவற்றை உண்பாராம். மாலையில் தோசை போன்ற விரைவாக செரிமானம் ஆக கூடிய உணவுகளையே எடுத்து கொள்வார்.

விறால் மீன் விரும்பி..!

விறால் மீன் விரும்பி..!

கலைஞருக்கு நெருக்கமான பல நண்பர்கள் இப்போதும் கூறும் ஒரு விஷயம் என்னவென்றால் அவர் சீரான உணவு முறையையே எப்போதும் பின்பற்றுவார் என்பதே. அசைவம் என்றாலும் அளவோடு அதனை உண்பார். ஆரம்பத்தில் அசைவம் உண்ணும்போது விறால் மீன் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என அவரது நெருங்கிய வட்டத்தினர் கூறுவார்கள்.

Leave a comment