சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் நாட்டிற்கு தேவையான தலைவர் ஒருவர் இருக்கவில்லை

30 0

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் நாட்டிற்கு தேவையான தலைவர் ஒருவர் இருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். 

சரியான தலைமைத்துவம் இருந்திருப்பின் நாடு இந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்து இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது அரசியல் கட்சிகள் தங்களது தலைமைத்துவத்தை பாதுகாத்து தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முற்படுகின்றதே அன்றி மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் கொள்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.