அதிகாரத்தைக் கைப்பற்றாமல் எதிர்க் கட்சித் தலைமைப் பதவி கோருவது முறையற்றது- JVP

198 0

மஹிந்த அணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதைவிடுத்து, ஆளும் தரப்பில் உள்ள ஐ.ம.சு.மு உறுப்பினர்களையும் உள்ளடக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இருக்கும் அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

எதிரணியில் 70 ஆசனங்கள் இருப்பதாயின் ஆளும் கட்சியில் உள்ள 26 பேருக்கு கீழ்பட்டு இருக்காமல் ஐ.ம.சு.முவின் நிறைவேற்றுக் குழுவில் பங்குபற்றி சகலரையும் இணைத்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். அதனைவிடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சிப்பது அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுந்த வாதப் பிரதிவாதத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அநுரகுமார திசாநாயக்க இதனைக் கூறினார்.

Leave a comment