ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

378 0
ஒரு தொகை கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மூன்று பேர் வெல்லம்பிட்டிய, சேதவத்தை, களுபாலம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் சந்தேகநபர்கள் பரிசோதிக்கப்படும் போது 10 கிலோவும் 200 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

கொழும்பு, வாத்துவை மற்றும் ரிதிகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a comment