வடக்கின், யாழ். பொலிஸ் அத்தியட்சர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய, குழுவைச் சேர்ந்த 27 பேரை கடந்த இரு வாரங்களுக்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து குறித்த தாக்குதல்களை நடாத்த பயன்படுத்தப் பட்டதாக சந்தேகிக்கப்படும் 7 மோட்டார் சைக்கிள்களையும், நான்கு வாள் களையும் ஒரு கோடரியையும் கைப் பற்றியுள்ளதாக வடமாகாணத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாழில் இருந்து ஆவா குழுவை முழுமையாக துடைத்தெறியும் நடவடிக்கை தொடர்வதாகவும் ஆவா குழுவினரைக் கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை உள்ளடக்கிய 10 மோட்டார் சைக்கிள் படையணி குழுக்களையும் 30 மேலதிக உளவுத்துறை அதிகாரிகளையும் யாழில் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
யாழ்., மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பிலேயே இந்த 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.
ஆவா குழுவிலிருந்து விலகிச் செல்பவர்கள், அக்குழு தொடர்பில் ரகசியங்களை வெளியே சொல்லலாம் எனும் அச்சத்தில் முன்னாள் உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் வீடுகள் இலக்குவைக்கப்படுவதாக கண்டறிந்துள்ள பொலிஸார், அந்த வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பிலும் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
அத்துடன் பாடசாலை மாணவர்கள், பாடசாலையை விட்டு விலகியவர்களை தமது குழுக்களில் இணைத்துக்கொள்ள ஆவா குழுவினர் முன்னெடுக்கும் பிரயத்தனங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
24 மணி நேர நடவடிக்கையாக இந்த விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்
மா அதிபர் ரொஷான் பெர்னாண் டோவின் கீழ், யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜய சுந்தரவின் வழிநடத்தலில் நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

