ஈழத்தை நோக்கி புறப்பட்ட ஈழத்தமிழர் நடுவானில் மரணம்!

9 0

பாரிய கனவுடன் தாயக்கை நோக்கி பயணித்த நபரின் உயிரி நடுவானில் பிரிந்துள்ளமை அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பாரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

டென்மார்க்கில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட நபர் விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் தனது தாயகத்தை நோக்கி புறப்பட்ட பரமலிங்கம் பாலச்சந்திரன் என்ற 58 வயதுடைய தமிழரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் விமானம் புறப்பட்டு ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னரே குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

தொடர்ந்தும் விமானத்தில் பணியாளர்களால் குறித்த நபருக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ள போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டுபாய் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகள் குறித்த நபர் உயிரிழந்த விடயத்தை அறிந்து கிறிஸின் தலைநகரான எதேன்ஸில் அவரது உடலை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் இறந்த நபரின் உடல் அவரது சொந்த இடமான டென்மார்க்கிற்கு கொண்டு வரப்படவில்லை. அவரின் உடலை சொந்த இடத்திற்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அதிகாரிகள் சட்டநடைமுறைகளை எடுத்துள்ளனர்.

உயிரிழந்த நபர் 3 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 16, 2017 0
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 24.2.2017 அன்று…

நிலாமுற்ற குழுமத்தின் முதலாவது ஐரோப்பிய நிகழ்வு!

Posted by - February 1, 2019 0
டென்மார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 27-01-2019 ) அன்று பரடெசியா நகரில் சிறப்பாக இடம்பெற்றது. பைந்தமிழ் செம்மல் வ.க.பரமநாதன். அவர்கள் கவியரங்கத்திற்கு தலைமை தாங்க சுமார் ஒரு மணி…

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

Posted by - January 24, 2017 0
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 21.01.2017 சனிக்கிழமை அன்று…

டென்மார்க் Aarhus நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு.

Posted by - July 26, 2017 0
இலங்கையில் 1983ம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை தமிழினப் படுகொலையின் 34ம் ஆண்டு நிறைவையொட்டி கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus நகரில் இன்று (25.07.2017) படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு சுமந்து…

Leave a comment

Your email address will not be published.