சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீடு!

274 0

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். அந்த வழக்கை விசா­ர­ணைக்கு ஏற்­றுக் கொள்­வது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று முடி­வெ­டுத்­தது. இதை­ய­டுத்து நாளைய தினம் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

வடக்கு மாகாண மீன்­பிடி மற்­றும் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்­த­வர் பா.டெனீஸ்­வ­ரன். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அவ­ரைப் பதவி நீக்­கம் செய்­து­விட்டு புதிய அமைச்­ச­ரவை ஒன்றை நிய­மித்­தார். இதை­ய­டுத்து தன்னை அமைச்­ச­ர­வை­யில் இருந்து நீக்­கி­யமை சட்­டப்­படி செல்­லாது என­வும் தானே தொடர்ந்­தும் சட்­டப்­ப­டி­யான அமைச்­சர் என உத்­த­ர­வி­டக்­கோ­ரி­யும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தொடர்ந்­தார் டெனீஸ்­வ­ரன்.

இந்த வழக்கை விசா­ரித்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற அமர்வு வழக்­காளி கோரி­ய­படி அவர் தொடர்ந்­தும் அமைச்­ச­ரா­கப் பதவி வகிக்­கி­றார் என்று இடைக்­கால உத்­த­ரவு பிறப்­பித்­தது. டெனீஸ்­வ­ரன் வகித்த அத்­தனை அமைச்­சுக்­க­ளுக்­கும் டெனீஸ்­வ­ரனே தொடர்ந்­தும் அமைச்­ச­ரா­வார் என மன்று கட்­ட­ளை­யிட்­டது.

ஆனால் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்ட பின்­ன­ரும்­கூட டெனீஸ்­வ­ரன் தனது அமைச்­சுப் பொறுப்­பு­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எவை­யும் வடக்கு மாகாண சபை­யி­னால் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்த விட­யத்­தில் தனக்கு அமைச்­சர்­களை நிய­மிக்­கவோ விலக்­கவோ உரிமை இல்லை என்று நீதி­மன்­றம் தெரி­வித்­து­விட்­ட­தால் தான் டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ராக நிய­மிக்­கவோ ஏற்­க­னவே உள்ள அமைச்­சர்­க­ளில் ஒரு­வரை விலக்­கவோ நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்று முத­ல­மைச்­சர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

அத்­தோடு டெனீஸ்­வ­ரன் விட­யத்­தில் வடக்கு மாகாண ஆளு­நரே தவ­றி­ழைத்­தார் என்­றும் அவரே இந்­தப் பிரச்­சி­னை­யைச் சரி­செய்­ய­வேண்­டும் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி வரு­கின்­றார்.

ஆளு­நரோ, நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய அமைச்­ச­ர­வையை அறி­விப்­ப­தற்கு ஏது­வாக அமைச்­சர்­க­ளின் பெயர்­க­ளைப் பரிந்­து­ரைக்­கு­மாறு முத­ல­மைச்­ச­ரி­டம் கேட்­ட­போ­தும் அவர் அத­னைச் செய்­யா­த­தன் கார­ண­மா­கவே இந்­தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்லை என்று கூறி வரு­கின்­றார்.

இப்­படி இரு தரப்­பி­ன­ரும் மாறி மாறிப் பந்­தைத் தள்­ளி­வ­ரும் நிலை­யில் நீதி­மன்ற உத்­த­ரவை அலட்­சி­யப்­ப­டுத்தி அவ­ம­ரி­யாதை செய்­தி­ருக்­கி­றார்­கள் என்று தெரி­விக்­கும் வழக்கை டெனீஸ்­வ­ரன் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­க­வும் தனது அமைச்­சுப் பொறுப்­புக்­க­ளைக் கைவ­சம் வைத்­தி­ருக்­கும் இரு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருக்­கி­றார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான சிவ­நே­சன், அனந்தி ஆகி­யோர் மீதே குறித்த வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. எனி­னும் டெனீஸ்­வ­ர­னின் அமைச்­சுப் பதிவி தொடர்­பில் இடம்­பெ­றும் வழக்கு நாளை­ய­தி­னம் மன்­றில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தால் அன்­றைய தினமே நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கும் எடுத்­துக் கொள்­ளப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a comment