மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்க்கப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் போனேர் அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கையில் பாரிய திருப்புமுனையாக காணப்படுகின்றது என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் நகரவாயில் பகுதியில் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறுகின்ற மனித எலும்பு கூடுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. புதைக்குழியினை தோண்ட தோண்ட மனித எலும்பு கூடுகள் வெளிவருவது பல உண்மைகளின் வெளிப்பாடாகவே உள்ளது.
ஆய்வு பணிகளுக்கு நிதியமைச்சின் ஊடாகவே இதுரை காலமும் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக மீட்பு பணிகள் தாமதப்படுத்தப்பட்டு கைவிடும் நிலையில் காணப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த நடவடிக்கைகளுக்கு நிதியுதவி மற்றும் நவீன தொழினுட்ப வசதிகளை வழங்க காணாமல் போனோர் அலுவலகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

