கூட்டு எதிர்க்கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்வதா, இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் செவ்வாய்க் கிழமை சபாநாயகர் தீர்மானிக்கவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
பத்திரமுல்லையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் அனைவரும் நேற்று சபாநாயகரிடம் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே அது குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானிக்கவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய கூட்டு எதிர்க்கட்சியிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

