கிளிநொச்சி சந்தைக் கட்டத்தில் தீ – 60 கடைகள் எரிந்து நாசம்

350 0

14371798_1431871423494877_974287190_nகிளிநொச்சி சந்தைப் பகுதியில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட பாரிய தீயினால் புடவை மற்றும் பழக்கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றிரவு 8.30 இற்கும் 9.00 மணிக்குமிடையில் சந்தையில் பாரியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்காரணமாக அனைத்துப் பழக்கடைகளும், 60 புடவைக்கடைகளும் தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக காவல்துறையின் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்.