திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அரசியலுக்கு

279 0

புதிய கட்சி ஒன்றை உருவாக்கி மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கடுவலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த்துள்ளார்.

கடந்த காலங்களில் பகிரங்க அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்ததாகவும், மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகவும், அது முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் டீ. எஸ். சேனாநாயக்க ஆகியோரின் கொள்கைகளுக்கு அமைவான அரசியல் செயற்பாடாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாட்டில் தற்போதுள்ள பழைய தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்றும் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment