பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பு – ஜே.வி.பி

458 0

இலங்கையில் மத்திய தர வகுப்பினர் பாவிக்கின்ற 1000 சி.சி.கொள்ளளவுக்கு உட்பட்ட வாகனங்களின் வரிகளை அதிகரிப்பு செய்துவிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தினை அதிகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் சீர்குலைந்து காணப்படுகின்றமையால் அதில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக, அரச சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டின் பிரதான துறைமுகம் மற்றும் விமான நிலையங்களின் ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பது கவலைக்குரிய விடயமாகும் எனவும் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

Leave a comment