டெங்கு நோயாளர்கள் குறைந்த மாவட்டமாக முல்லைத்தீவு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது!

257 0

இலங்கையிலேயே டெங்கு நோயாளர்கள் குறைந்த மாவட்டமாக முல்லைத்தீவு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கடந்த 7 மாதங்களில் 51 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர் கடந்த மாதங்களில் முதலிடத்தில் இருந்த மன்னார் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது

இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் தோற்று நோய் விஞ்ஞான பகுதி வெயிளிட்டுள்ளது.

டெங்குநோய்த் தாக்கம் தொடர்பில் குறித்த பகுதியினர் மாதாந்தம் வெளியிடும் அறிக்கையின் ஜூலை மாதத்துக்கான அறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிட்பட்டது.

அதில் இந்த மாதம் முழுவதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பேரே டெங்குநோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்றுள்ளது. இந்த மாதம் இலங்கை ழுமுவதும் மொத்தமாக 5ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவில் வெறும் 7பேரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தகாலப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு, தற்போது அங்கு வறட்சி மேலோங்கி, மக்கள் பெரும் கஸ்ரத்தில் உள்ளனர். இவ்வாற பின்னணிகளைக் கொண்;ட முல்லைத்தீவில் டெங்குநோய் ஒழிக்கப்பட்டுள்ளது என்றே கூறமுடியும். பெரும் பாதிப்புகளை எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் மக்கள் டெங்குநோயில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதாரப் பிரிவினர் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவில் கடந்த ஜனவரி மாதம்10 பேரும், பெப்ரவரியில் 9 பேரும், மார்ச்சில் 6 பேரும், ஏப்பரலில் 4 பேரும், மே மாதம் 5பேரும், ஜூன் மாதம் 10 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த மாதங்களில் மன்னார் மாவட்டமே டெங்குநோயாளர்கள் குறைந்த மாவட்டமாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.. எனினும் கடந்த ஜூலை மாதம் மன்னாரில் டெங்கு தலைவரித்தாடியது. ஜூன் மாதம் 9 டெங்கு நோயார்கள் இன்காணப்பட்ட மன்னாரில் ஜூலை மாதம் 67 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் மன்னார் 7ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மன்னாரில் கடந்த மாதம் மாணவி ஒருவரும் டெங்குவால் உயிரிழந்தார்.

Leave a comment