சிறபான்மை இன மக்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக ஆராயும் நோக்கில், சிறுபான்மையின மக்களின் விவகாரங்களை ஆராயும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார்.
இதற்கமைய குறித்த ஐநா பிரதிநிதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 தினங்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ள அவர், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராயவுள்ளதுடன் வடக்கு மாகாணத்தின் நிலமைகளையும் ஆராயவுள்ளார்.
அத்துடன் அரச தரப்பினர், எதிர்க்கட்சியினர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மேலும், அடுத்த வருட முற்பகுதியில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் தொடர்பான ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் மைனா கை இலங்கைக்கு பயணம் செய்து மனித உரிமைகள் நிலமை குறித்து ஆராயவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

