இரண்டாவது நாளாக தொடரும் கல்முனை மாநகர சிற்றூழியர்களின் போராட்டம்

239 0

பல ஆண்டுகளாக கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமை புரிந்தவர்கள் சுமார் 125 பேர் இன்று இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி செயலாளரின் உத்தியோகபூர்வ நிரந்தர நியமன கடிதத்துடன் சுமார் 10 ஊழியர்கள் கல்முனை மாநகர சபைக்கு கடமைபெறுப்பேற்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல ஆண்டுகளாக தற்காலிகமாக கடமையாற்றிய ஊழியர்களை நிரந்தரமாக்க கோரியும் நேற்று (1) கல்முனை மாநகர சபைக்கு முன்னாள் இவர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தற்போது இன்று இரண்டாவது நளாகவும் சத்தியாகிரக போராட்டம் மேட்கொண்டு வருகின்றனர்.

இதன்போது அங்கு கடமை புரியும் ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்; “கல்முனை மாநகர சயையில் நாங்கள் 102 பேர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம். எமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் பெரும் கஷ்டப்பட்டு, கொண்டிருக்கின்றோம். இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.” என வலியுறுத்தினர்.

மேலும் பல்வேறுபட்ட வாசகங்களை ஏந்தியவண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இப் போராட்டத்துக்கு மதத்தலைவர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்களுக்குரிய நிரந்த தீர்வு வரும் வரை போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளப்போவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment