சுரக்ஷா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

259 0

சுரக்ஷா விசேட நிதியத்துடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, இலங்கை காப்பாறுதி கூட்டுத்தானத்தின் தலைவர் ஹேமக்க அமரசூரிய ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த காப்புறுதி மூலம் தேசிய, மாகாண, சர்வதேச, தனியார் பாடசாலைகளில் கற்கும் 45 இலட்சம் மாணவர்களுக்கான காப்புறுதி உதவி கிடைக்கும். இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமான நோய் சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கான செலவினங்களுக்கென 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மேலதிகமாக 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்படவுள்ளது.

சத்திர சிகிச்சை, மாரடைப்பு, சிறுநீரகம் செயலிழக்கின்றமை உட்பட 12 சிகிச்சைகளுக்காக ஒரு இலட்சம் ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை காப்புறுதியை வழங்க காப்புறுதி கூட்டுத்தாபனம் எதிர்பார்த்துள்ளது.

Leave a comment