தேர்தலை நடத்தாது தந்திரமான செயல்களில் அரசு -ஜீ.எல். பீரிஸ்

217 0

இன்னும் 2 மாதங்கள் சென்ற பின்னர் 9 மாகாண சபைகளில் 6 சபைகளின் ஆயுட் காலம் நிறைவடைவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் திணைக்களமும் அதன் பொறுப்புகளை புறக்கணித்து வருவதாகவும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவிய போது, தன்னால் எதனையும் செய்ய முடியாது எனவும் பாராளுமன்றத்தினால் மட்டுமே இதற்கான தீர்வு ஒன்றை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேர்தல் திணைக்கள தலைவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு தேர்தலை நடத்தாது ஒத்தி வைத்து, தந்திரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a comment