டின்மீன்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்கிறது சதொச

222 0

தேசிய டின்மீன் தொழிற்சாலைகளில் இருந்து சதொச நிறுவனம் கொள்வனவு செய்யும் டின்மீனுக்கு தலா 20 ரூபா மேலதிக தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு குழு சமீபத்தில் கூடி இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

தேசிய கைத்தொழிற்சாலைகளில் இருந்து கொள்வனவு செய்யப்படும் 425 கிராம் எடை கொண்ட டின்மீனுக்கு 60 ரூபா செலுத்துமாறு வாழ்க்கை செலவு குழு, சதொச நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

இதற்கமைய தேசிய தொழிற்சாலைகளிலிருந்து சதொச கொள்வனவு செய்யும் 425 கிராம் கொள்ளளவை கொண்ட டின்மீன் ஒன்றுக்கு இதுவரையில் 40 ரூபா செலுத்தப்பட்டது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இத்தொகையை 60 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave a comment