சீனி அதிகவிலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை

333 0

444476695 ரூபாவுக்கு மேல் வியாபார நிலையங்களில் சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் சீனியின் வர்த்தகப் பொருட்களுக்குரிய வரி ஒரு ரூபா 75 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சீனிக்கான விசேட வர்த்தகப் பொருட்களுக்குரிய வரி 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒரு கிலோகிராம் சீனியின் அதிகபட்ச சில்லறை விலையான 95 ரூபா ஆகும்.

இதில் மாற்றம் எதுவும் ஏற்பட மாட்டாதென நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் கரும்புத் தொழிலையும், கரும்பு செய்கையாளர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இறக்குமதி செய்யப்படும் சீனிக்குரிய விசேட வர்த்தக சேவைப் பொருட்களுக்கான வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.