பலங்கொட, மஸ்ஸென்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலங்கொட சமனலவத்த வீதியின் மஸ்ஸென்ன பகுதியில் நேற்று (26) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி பாதைவிட்டு விலக கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மஸ்ஸென்ன பகுதியை 56 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பாதுகாப்பற்ற விதத்தில் பயணித்த காரணத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


