அநுராபுரம், ஹதருஸ்வல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டுயுடன் மோதி பின்னர் லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பதவி, ஶ்ரீபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் லொறியின் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசபரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

