புதிய விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது விசாரணைக்குரிய வழக்கு

324 0

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட புதிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் ஆளணியின் பிரதானி காமினி செனரத்துக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் நேற்று(26) இந்த குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். ஹல்கனோ ஹோட்டல் மற்றும் ஸ்பா நிறுவனத்தில் பொது மக்களின் நிதியான 500 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்திடமிருந்து கன்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் இவர்களுக்கு எதிரான விசாரணை பற்றிய அறிக்கை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 92 ஆவணங்கள் மற்றும் 63 சாட்சியங்களின் பெயர்களையும் சட்டமா அதிபர் பட்டியலிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய மோசடிகள் தொடர்பில் துரிதமாக விசாரணை நடத்துவதற்காக 3 விசேட மேல் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை முடிவு செய்திருந்தது. இதன் பிரகாரம் முதலாவது நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இம்மாத இறுதிக்குள் விசாரணைகளை ஆரம்பிக்கும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

Leave a comment