கெகிராவ, மாமிணியாரபேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கெகிராவ, ரத்மல்கந்த பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

