பொரள்ள, சரணபாலஹிமி மாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 12 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொரள்ள பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்து உள்ளதுடன் பொரள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

