ஆஸ்திரேலிய ஓபன் டேபில் டேன்னிஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுத்த ஏர் இந்தியா

244 0

இந்தியாவை சேர்ந்த 17 டேபில் டேன்னிஸ் வீரர்களில் 7 பேருக்கு ஆஸ்திரேலியா செல்ல ஏர் இந்தியா நிறுவனம் அனுமதி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உலக டேபில் டென்னிஸ் போட்டிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பாக 17 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
 இதற்காக ஆஸ்திரேலியா செல்வதற்காக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்பட அனைவரும் டெல்லி விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தனர். ஆனால் 17 வீரர்களில் 7 வீரர்களுக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதால் விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
அவர்களில் காமன்வெல்த் போட்டிகளில் டேபில் டென்னிசில் பதக்கம் வென்ற மாணிக்க பத்ராவும் ஒருவர் ஆவார். அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, மாணிக்க பத்ரா இவ்விவகாரத்தை ட்விட்டரில் பதிவிட்டு அதில் விளையாட்டுத்துறை மந்திரி ரஜவர்தன் சிங் ரத்தோர் மற்றும் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்குகளை டேக் செய்தார்.
இதைத்தொடர்ந்து, இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குனரான நீலம் கபுர், மாணிக்க பத்ராவின் ட்விட்டர் பதிற்விக்கு பதிலளித்து, அவர்கள் ஆஸ்திரேலியா செல்வதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும் என் உறுதியளித்தார்.
இறுதியாக, அனுமதி மறுக்கப்பட்ட வீரர்களுக்கு ஆஸ்திரேலியா செல்வதற்கான விமான டிக்கெட்டுக்ளை தயார் செய்யப்பட்டது, பிறகு தன்னுடைய கோரிக்கையை ஏற்று விமான டிக்கெட் ஏற்பாடு செய்த நீலம் கபுருக்கு நன்றி தெரிவித்த மாணிக்க பத்ரா விமான டிக்கெட்டுடன் தான் இருக்கு போட்டோவை பதிவிட்டார்.
ஆஸ்திரேலிய போட்டிக்கு செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சகம் செய்திருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதற்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத காரணமும், பொறுப்பின்மையே காரணம் என இந்திய டேபில் டென்னிஸ் பெடரேசனின் பொதுச்செயலாளர் எம்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

Leave a comment