முட்டாள் என்று கூகுளில் தேடினால் வந்து நிற்கும் டொனால்டு ட்ரம்ப் புகைப்படம்

269 0

கூகுள் இணையதளத்தில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புகைப்படங்கள் வந்து நிற்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அவருடைய அதிரடி முடிவுகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவர் மீதான இணையதள தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிரபல தேடுபொறி தளமான கூகுளில் முட்டாள் (idiot) என்று தேடினால் ட்ரம்பின் புகைப்படங்கள் தெரிவது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக இணையதள போராட்டத்தை மேற்கொள்பவர்கள், ரெட்டிட் எனும் இணையதளத்தில் அவர் படத்துடன் முட்டாள் என்ற வார்த்தையை இணைக்கும் நூதன போரட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதற்கான பிரசாரங்களையும் சர்வதேச அளவில் வெளிப்படையாகவே அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் ‘அல்காரிதம்’ இணையதளத்தில் முட்டாள் என தேடினால் ட்ரம்பிம் படத்தையும் சேர்த்து தேடி பயனருக்கு கொடுக்கிறது.
கடந்த மே மாதம் கூகுளின் தேடலில் ‘பப்பு’ என்ற இந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படமும், ‘பேகு’ என்ற இந்தி வார்த்தைக்கு பிரதமர் மோடியின் படமும் கூகுளில் தெரிந்து சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Leave a comment