இலஞ்சம் கொடுத்து அரசியல் வாதிகளை விலைக்கு வாங்க பார்கின்றனர்- சீனித்தம்பி யோகேஸ்வரன்

310 0

மட்டகளப்பில் நிர்மாணிக்கவுள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன். எனினும் இது தொடர்பாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இனிமேல் எத்தனோல் நிறுவனம் தொடர்பாகவோ அல்லது அர்ஜூன அலோசியஸுக்கு எதிராகவோ எதுவும் பேச வேண்டாம்.  பேசாமல் இருந்தால் 5 கோடி ரூபா தருவதாக தொலைபேசியில் அழைத்தவர்கள் கூறினர். இலஞ்சம் கொடுத்து அரசியல் வாதிகளை விலைக்கு வாங்க பார்கின்றனர் என மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலஞ்சம் மோசடிகள் தொடர்பில் முதலில் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் அரசியல் வாதிகள் தொடர்புப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக அரசியல் வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும்.

இலஞ்சத்திற்கு தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான மதுபான சாலைகள் திறக்கப்பட்டு வழிநடத்தப்படுகின்றன. மட்டக்களப்பில் மாத்திரம் 20 முதல் 67 வரையான சட்டவிரோத மதுபான சாலைகள் உள்ளன. இது தொடர்பான நான் தடுக்க சென்றால் எனக்கு இலஞ்சம் தருவாக கூறுகின்றனர். பொலிஸாருக்கு இது தொடர்பான அறிவித்தால் அது அவர்கள் கண்டுக்கொள்வதில்லை. அவர்களும் இலஞ்சம் பெறுகின்றனர். இலஞ்சம் கொடுத்து நீதியை மூடிமறைக்க பார்கின்றனர்.

அத்துடன் மட்டகளப்பில் உள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன். இது தொடர்பாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இனிமேல் எத்தனோல் நிறுவனம் தொடர்பாகவோ அல்லது அர்ஜூன அலோசியஸுக்கு எதிராகவோ எதுவும் பேச வேண்டாம்.  5 கோடி ரூபா தருவதாக தொலைபேசியில் அழைத்தவர்கள் கூறினர். இலஞ்சம் கொடுத்து அரசியல் வாதிகளை விலைக்கு வாங்க பார்கின்றனர் என்றார்.

Leave a comment