கூட்டு எதிர்க் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குமாறு கோரி அடுத்த வாரம் கடிதம் ஒன்றை வழங்குவதற்கு கூட்டு எதிர்க் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த கடிதத்துக்கு கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 70 பாராளுமன்ற உறுப்பினரும் கையொப்பமிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் இன்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

