நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது மனித உரிமை மீறல் அல்ல-விஜித் விஜயமுனி

347 0

எந்தவொரு நபருக்காவது சட்டத்துக்கு மாறான முறையில் தண்டனை வழங்குவதாக இருந்தால் மாத்திரமே அது மனித உரிமை மீறல் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறினார்.

நீதிமன்ற செயற்பாட்டின் ஊடாக குற்றவாளியான நபருக்கு தண்டனை வழங்குவதில் எவ்வித மனித உரிமை மீறலும் இடம்பெறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

விஷேட நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவது தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வருவதன் ஒரு நோக்கம் என்பதுடன், பொதுமக்கள் எதிர்பார்த்த ஒன்று என்றும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதுபோன்று சட்டத்தை அமுல்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பார்களாயின் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கையின் கீழ் குற்றவாளியாக தண்டிக்கப்பட இருப்பவர்கள் என்றும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறினார்.

Leave a comment