தேர்தல் ஒன்று வரும்போது கூட்டுச் சேர்வதற்கு ராஜபக்ஷாக்களையும் புறக்கணிக்க வேண்டிய தேவையில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இன்றிரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உடன் கேள்வி பதில் நிகழ்வில் கலந்துகொண்டபோது, அடுத்த தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டுச் சேர்வது என வினவியதற்கே இவ்வாறு கூறினார்.
இவ்வளவு காலமும் ராஜபக்ஷாக்களை விமர்சித்து விட்டு அவர்களுடன் தேர்தலில் கூட்டுச் சேர்வது நியாயமானதா? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, நான் அவர்களுடன் சேர்கிறேன் என்று கூறவில்லை. மாற்றுக் கட்சிகள் பலதும் உள்ளன. தேர்தலின் போது பார்த்து தீர்மானிப்போம் எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

