துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கதிர்காமம் கிரிவெஹர விகாராதிபதி கொபவக தம்மின்த தேரரின் வைத்தியசாலைக் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி நிதியத்தினால் ஒரு மில்லியன் ரூபா நிதி இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
தேரரின் வைத்தியசாலைக் கட்டணமாக சுமார் 3 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

