மரண தண்டனை கைதிகள் 18 பேரில், 2 பெண்கள்

201 0

போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 18 பேர் காணப்படுவதாகவும் அவர்களது பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 18 பேரில் 4 பாகிஸ்தானியர்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர்களிடையே இருபெண்களும் காணப்படுவதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதேவேளை, தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அதிகாரியான அளுகோசுவன் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment