கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமி!

383 0

உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமியின் தன்னம்பிக்கையும், அந்தச் சிறுமியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சையின் பதிலுமே இன்றைக்கு இணையத்தில் ஹிட்டடித்திருக்கிறது.

கூகுள்-இணைய உலகின் ராஜா:

பதினெட்டு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்கவைத்த தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் தனது கால்பதித்த அத்துணை துறைகளிலும் வெற்றியே கண்டுள்ளது.இதற்கு உதாரணங்களாக அதன் துணை இணையத்தளங்களான யூட்யூப்,கூகிள் மேப்,ஜிமெயில் உள்ளிட்ட பலவற்றை நாம் கூறலாம்.

வேலை செய்ய மகிழ்ச்சியான இடம்:

மேலும் உலகிலேயே மகிழ்ச்சியாக வேலை செய்ய ஏற்ற இடமென பணியாளர்கள் குறிப்பிடுவதும் கூகுளைத்தான்.அந்நிறுவனத்தில் தனக்கு ஓர் வேலை கிடைத்து விடாத என நினைப்பவர்கள் ஏராளம்.மற்ற தொழில்நுட்ப துறை நிறுவனங்களில் வேலை செய்வோர்க்குக்கூட கூகுளில் வேலை செய்ய வேண்டுமென்பது நிச்சயம் ஓர் கனவாகத்தான் இருக்கும்.

கடிதம் வழியே வேலை கேட்ட சிறுமி:

இந்நிலையில்,கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் 7 வயது சிறுமி.அவர் பெயர் க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்”என் பெயர் க்ளோயி நான் பெரியவளானதும் கூகிள்ல வேலை செய்ய விரும்புறேன்.

என் பெயர் க்ளோயி

அப்டினு சொல்றாரு எங்க அப்பா

எனக்கு சாக்லேட் பாக்டரியில் வேலை செய்யவும் பிடிக்கும்.ஒலிம்பிக்கில் நீச்சல் செய்யவும் பிடிக்கும்.கூகிள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல உக்காந்து சறுக்கி விளையாடலாம்னு சொல்றாரு அப்பா.எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும்.என்கிட்ட டேப்லெட் இருக்கு அதுல நான் கேம் விளையாடுறேன்.அப்பா தந்த கேம் ல ரோபோவ கட்டத்திற்கு மேலயும் கீழயும் நகர்த்தினால் கம்ப்யூட்டரைப்பத்தி அதிகமா தெரிஞ்சுக்கல அப்டினு சொல்றாரு எங்க அப்பா” என்று விரிகிறது அந்த சின்னஞ்சிறு மழலையின் கடிதம்.

படிச்சதுக்கு நன்றி

தனது கடிதத்தில் இறுதியாக,கூகுள்ல வேலைக்கு சேரணும்னா உங்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பணும்னு என்க அப்பா சொல்றாரு.ஆனா எப்படி அப்ளிகேஷன் அனுப்புறதுனு தெரியல.லெட்டர் எழுதினா போதும்னு அப்பா சொன்னாரு.என் லெட்டர படிச்சதுக்கு நன்றி. நா இத தவிர இன்னும் ஒரு லெட்டர் மட்டும் தான் எழுதியிருக்கேன்.அது கிறிஸ்துமஸ்காக என் அப்பாவுக்கு,”என்று தனது கடிதத்தை நிறைவு செய்கிறாள் அந்த அழகுச் சிறுமி.

கம்ப்யூட்டரும் ரோபோவும்

க்ளோயி-ன் இந்த கடிதத்திற்கு தனது மிகுந்த வேளைப்பளுவுக்கும் இடையில் அந்த தன்னம்பிக்கை சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி ஆச்சரியப்படுத்தியுள்ளார் கூகுள் நிறுவன சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சை.”டியர் க்ளோயி,உன் கடிதத்துக்கு மிகவும் நன்றி.உனக்கு கம்ப்யூட்டரும் ரோபோவும் பிடிக்குமென்பதில் மகிழ்ச்சி .தொழில்நுப்டபம் குறித்து உனது படிப்பை தொடருவை என நம்புகிறேன்.

பள்ளிப்படிப்பிற்கு பிறகு

நீ கடினமாக உழைத்தால் உன் ஒலிம்பிக் நீச்சல் கனவிலிருந்து கூகுளின் வேலை கிடைப்பது வரை எல்லாம் நிஜமாகும்.உன் பள்ளிப்படிப்பிற்கு பிறகு உனது கடிதத்தை பரிசீளிக்கிறேன்”என பிரிட்டனைச் சார்ந்த 7வயது சிறுமியின் தன்னம்பிக்கைக்கு நம்பிக்கை அளிக்கிற வகையில் பதில் கடிதம் எழுத்தியுள்ளார். 7 வயது சிறுமியின் தன்னம்பிக்கையும்,கூகுள் சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சையின் நம்பிக்கையளிக்கிற பதிலும் தானே இப்போது எல்லோருக்கும் தேவைப்படுவது.!

Leave a comment