தஞ்சையில், 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் பங்கேற்பு

1 0

தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் தா.பாண்டியன்,பழ.நெடுமாறன் பங்கேற்கின்றனர்.

அனைத்துக்கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அயனாபுரம் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணி மாநில தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைக்காக போராடும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல் துறை உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளத்தை அழித்து மக்களை பாதிக்க வைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணை போகிற திட்டங்களை அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

ராகுல் தலைமையில் நாளை காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்

Posted by - March 16, 2018 0
அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார்.

தேசிய பெண் குழந்தை தினத்தையொட்டி சமூகப்பணிக்காக சிறுமி ரக்‌ஷனாவுக்கு ரூ.1 லட்சம் !

Posted by - February 6, 2019 0
சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய சிறுமி ரக்‌ஷனாவுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பாராட்டு பத்திரத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

கார்த்தி சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர் – மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு கேட்கும் சி.பி.ஐ

Posted by - March 12, 2018 0
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் மூன்று நாள் விசாரணைக்காவல் முடிந்துள்ள நிலையில், அவர் இன்று பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் கட்டணம் உயர்கிறது

Posted by - December 20, 2017 0
தமிழக அரசு பஸ்களின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயர…

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டி: வைகோ பேட்டி

Posted by - February 27, 2017 0
உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று வைகோ கூறினார். கோவையில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

Leave a comment

Your email address will not be published.